யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் (25 ) வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு வர்த்தக சங்கங்களும், தனியார் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டாம் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சும் கோரியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டதனை அடுத்து, குறித்த படுகொலையை கண்டித்தும் நீதி கோரியும் வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண கடையடைப்பு இடம்பெறவுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பேரூந்து சங்கங்கள், மற்றும் வணிகர் கழகங்கள், பொது அமைப்புக்கள், சங்கங்கள் என அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.