தேவையற்ற விதத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ள அல்லது திரிபுபடுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை பொறுப்பேற்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அவ்வாறு பொறுப்பெற்பவர் நஷ்டமடைய வேண்டியேற்படும் எனவும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற பணத் தாள்களுக்கு மத்திய வங்கியினால் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால், கொடுக்கல், வாங்கல் செய்யும்போது இவ்வாறான பணத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அந்த பணத் தாள்களை வாங்குவதை புறக்கணிக்குமாறும் மத்திய வங்கி கேட்டுள்ளது.