Ad Widget

உயிரிழந்த யாழ் மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

கொக்குவில் – குளப்பிட்டியில் வியாழக்கிழமை உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு வழங்கப்படும் என, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை யாழ். பொது நூலகத்தில் ஜனாதிபதி தமிழ் ஊடகப் பிரிவினர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் இருவர் இறந்த செய்தி கேட்டு ஐனாதிபதி மிகுந்த கவலை அடைந்ததாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, சம்பவத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய நஸ்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts