வங்காளவிரிகுடாவில், இலங்கையின் வடகிழக்காக, 1,400 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக, இலங்கையின் அநேகமான இடங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த தாழமுக்கம் காரணமாக, இலங்கை நேரடியாகப் பாதிக்கப்படாது. எனினும், வடக்கு, தெற்கு, மேல் மற்றும் மலையகப் பகுதிகளில் 100- 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிய பெய்யலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மற்றும் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு, அந்நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.