>பல்கலை மாணவர் மீதான துப்பாக்கிச் சூட்டின் பின்னணி முழுமையாக ஆராயப்பட வேண்டும். இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன். உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் கோருகின்றேன் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புத் தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொக்குவில், குளப்பிட்டியில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் உந்துருளியில் சென்ற போது விபத்தில் உயிரிழந்தாக முதலில் தகவல்கள் வெளிவந்தன.
பின்பு நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் ஒருவர் சுடப்பட்டதால் இறந்ததாகவும் அதனால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மற்றையவர் இறந்தாகவும் ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கில் அரச பயங்கரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளதா நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன என்று ஒரு தோற் றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. எவராக இருந்தாலும் சட்டத்தை கையிலெடுக்க முடியாது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்