நாட்டில் தற்பொழுது பெய்து வரும் அதிக மழை மற்றும் பனி மூட்டம் என்பன காரணமாக தெற்கு அதிவேக பாதையில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை 60 ஆக குறைத்துக் கொள்ளுமாறு பாதை அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அப்பாதையில் இடம்பெற்று வரும் விபத்துக்களைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள், விளக்குகளை ஒளிரவிட்டுக் கொண்டு செல்லுமாறும் அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.