ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார்.
ஜனாதிபதி இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நிர்வாகப் பொறுப்புக்களையும் கையாளுவதற்கு பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதுடன்ஜனாதிபதி, பிரதமர் அல்லது சபாநாயகர் நாடு திரும்பும் வரையில் பொறுப்பினை வகிக்கவுள்ளார்.
இலங்கை வரலாற்றில் 1981 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் திகதி பிரதமர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன டயானா சார்ளஸ் இன் திருமணத்திற்கு சென்றபோது சபாநாயகராக இருந்த பாக்கீர் மாக்கா ஒருவாரம் வரையில் நாட்டின் பதில் தலைவராக இருந்தார்.
தற்போது 35 வருடங்களின் பின்னர் நிர்வாகக் கட்டமைப்பில 4 ஆவது இடத்தில் இருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் ஸ்ரீபவன் நிர்வாகத் தலைவராக உள்ளார்.