ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழில் தமிழில் வரவேற்ற மோடி!

இந்தியாவின் கோவாவில் இடம்பெறும் பிறிக்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வதையிட்டு, தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார்.

capture

“ஒரு நண்பரின் வருகை… பிறிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாட்டுக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு வருகை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி” என, மும்மொழிகளிலும் டுவீட் செய்யப்பட்டிருந்தது.

ப்பையேற்று, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, சனிக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி, இந்தியப் பிரதமரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோவா தாஜ் எக்ஸோட்டிகா ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை ஜனாதிபதியை மிகவும் உற்சாகமாக வரவேற்ற இந்தியப் பிரதமர், தமது அழைப்பினையேற்று பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டின் சமாந்தர மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வருகை தந்தமையானது, தனக்கும் இந்தியாவுக்கும் பிம்ஸ்டெக் பிராந்தியத்துக்கும் பாரிய பலமென்றும் தெரிவித்தார்.

இலங்கையானது, தெற்காசியப் பிராந்தியத்தில் தற்போது முக்கியமான பங்கு வகித்து வருகிறது எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், உடன்படிக்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, இலங்கையுடன் உள்ள ஆழமான உறவின் காரணமாக, இம்மாநாட்டில் பங்குபெற இலங்கையினை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

இதன்போது, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அழைப்பு விடுத்தமைக்கு இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நீண்டகால நட்புறவினை இது உறுதிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கை கடினமான நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும், இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டு வருவதையும் ஜனாதிபதி, இச்சந்தர்ப்பதில் நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

cu3rminukaakaro-jpg-large

Related Posts