பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலைதீவுகள் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அந்நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பொதுநலவாயத்திலிருந்து விலகும் முடிவு, மிகவும் கடினமானது என்ற போதிலும், தவிர்க்கப்பட முடியாதது எனவும் தெரிவித்தது.
பொதுநலவாயத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில், இரு தரப்பு உறவுகளிலும் பலதரப்பு உறவுகளிலும், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை, மாலைதீவுகள் உறுதி செய்யும் என, அந்த அறிக்கையில் மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.