உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துல்யாதேவ் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 88 வயது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மன்னர் நேற்று மரணமானதாக தாய்லாந்து அரண்மனை அறிவித்துள்ளது.
70 வருட காலம் அரியணையில் அமர்ந்திருந்த பெருமை மன்னர் அத்துல்யாதேவை சாரும். உலகில் நீண்டகாலம் முடிசூடி கொண்டிருந்த மன்னர் என்ற அடிப்படையிலும் அவரது பெயர் வரலாற்று ஏடுகளில் பதிவாகிறது.
தாய்லாந்து மன்னர் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை வழிநடத்தி சென்று மக்களின் பேரபிமானத்தை வென்றவர்.
அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.