Ad Widget

இலங்கை பணிப் பெண்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை

துபாயை ஆளும் குடும்ப உறுப்பினரின் அரண்மணையில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை பணிப் பெண்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என, அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

அரண்மனையில் இருந்து கடந்த மார்ச் மாதம் நகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்பவற்றை கொள்ளையிட்டார்கள் என, குறித்த இரு பெண்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, அவர்கள் இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என, அபுதாபி தேசிய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாளிகையின் உரிமையாளர்கள் எவரும் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை எனவும் அந்த ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான குறித்த கட்டிடம் ஷேக் முகமது பின் ரஷீத் அல் இனால் ஆளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts