ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளை தேடி திறிகின்றனர்.
ஜனாதிபதியை சந்தித்து நான் எனது மகள் தொடர்பான தகவல்களை கூறிய சந்தர்ப்பத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்தார். ஆனால் இது வரை தீர்வு கிடைக்கவில்லை என வவுனியாவைச் சேர்ந்த ஜெயவனிதா என்ற தாய் கண்ணீர்மல்க தெரிவித்தார்.
மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.