யாழ்ப்பாணம் வதிரியைச் சேர்ந்த திருமதி.குணசேகரன் பொன்னரசியின் சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான பிரதீபா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இவ்வாண்டுக்கான பிரதீபா விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு நெலும்பொக்கன கலையரங்கில் இராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது திருமதி.குணசேகரன் பொன்னரசிக்கு ராஜாங்க அமைச்சரினால் இந்த விருது வழங்கப்பட்டது.
இவர் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த தேவரயாழி இந்துக்கல்லூரியில் 2010ம் ஆண்டு முதல் கடமையாற்றி வருகின்றார். 26 வருட காலம் ஆசிரியர் சேவையை பாராட்டும் வகையிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.