இனிப்புப் பதார்த்தங்களுக்கான வர்ண அடையாளங்கள்

இனிப்புப் பதார்த்தங்களுக்கான வர்ண அடையாளத்தை அறிமுகம் செய்ய சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன திட்டமிட்டுள்ளார்.

இலங்கை இனிப்புப் பதார்த்த உற்பத்தியாளர் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது.

கேக், தொதல், பூந்தி, பிஸ்கட் போன்ற இனிப்புப் பண்டங்களுக்கு விரைவில் வர்ண அடையாளங்கள் அறிமுகப்படுதப்படும். இனிப்புப் பதார்த்தங்களில் சேர்க்கப்பட்டுள்ள சீனியின் அளவை வர்ண அடையாளங்களின் மூலம் நுகர்வோருக்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குளிர்பானங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வர்ண அடையாளம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts