வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசனகுளமான வவுனிக்குளம் 2350 வருடங்கள் பழமையானது. எல்லாள மன்னனினால் கட்டப்பட்டதுதாக கூறப்படுகிறது.
யுத்தம் காரணமாக கால்வாய்கள் உடைபெடுத்தநிலையில் காணப்பட்டதனால் இராணுவத்தின் 65 வது பிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் 1000 இராணுவம் வீரர்களைக் கொண்டும் பொதுமக்களின் ஒத்துழைப்புக் கொண்டும் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசனக்கால்வாய் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தின் கனரகவாகனங்களின் ஒத்துழைப்புடனும் நேற்றுகாலை 7.30 மணியளவில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்பாசனத்திணைக்கள பணிப்பாளர் என்.ஸ்ரீஸ்கந்தராசா, வவுனிக்குள நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் கா.விகர்ணன் அவர்களும் ஆலங்குளத்தின் இராணுவத்தின் 65 படைப்பிரிவின் இராணுவதளபதியும் கலந்து கொண்டனர்.
இந்த புனரமைப்பால் சுமார் 2000 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.