வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள் முடியும் தறுவாயினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சு, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக பூநகரி, நாவற்குழி, கட்டுடை, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு பிரதேசங்களுக்கான நீர்த்தாங்கி அமைக்கும் நடவடிக்கை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நீர்த்தாங்கிகளின் கட்டுமானப் பணிகள் முடியும் தறுவாயை அடைந்துள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நீர்த்தாங்கிகள் 2014ஆம் ஆண்டு மார்கழி மாதம் 14ஆம் திகதி குறித்த பகுதிகளில் நீர்த்தாங்கிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் இந்தவருடம் முடியும் தறுவாயை எட்டியுள்ளது.
குறித்த நீர்த்தாங்கிகள் மூலம் பூநகரி, மண்டைதீவு, வேலணை போன்ற பகுதிகளில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போதியளவு நிவர்த்திசெய்யமுடியுமெனவும் பொருளியிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.