எந்த சூழ்நிலையிலும் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட மாட்டாது என மின்சக்கி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள நிலையில் அந்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
100க்கு 5 வீதமாக மின் கட்டணத்தை உயர்த்துமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் 6 மாதங்களுக்கு கட்டணத்தை உயர்த்தும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் தொடர்ந்தும் அமுலில் இருந்தால், மாதாந்தம் 850 மில்லியன் ரூபாய் நட்டத்தை சந்திக்கநேரிடும் என மின்சார சபை சுட்டிக்காட்டி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையானது, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவால், மின்சக்தி, எரிசக்தி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என அந்த அமைச்சு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.