Ad Widget

கவர்ச்சிக் கன்னி கிம் காடஸ்சியன் பாரிஸில் ஆயுத முனையில் கொள்ளை

கவர்ச்சியால் மேற்குலக நாடுகளில் அதீத பிரபல்யம் அடைந்துள்ள அமெரிக்காவின் கவர்ச்சி கன்னியான கிம் காடஸ்சியன் வெஸ்ட்டிடம் இருந்து மில்லியன் கணக்கான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

kim

பாரிஸ்சிலுள்ள சொகுசு வீட்டில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அவரிடம் இருந்த 6 மில்லியன் யூரோ பெறுமதியான நகை பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் நவநாகரீக உடை அலங்கார கண்காட்சி வாரத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையிலேயே அமெரிக்காவின் கவர்ச்சிக் கன்னியான பிரபல மொடல் அழகியும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கிம் காடஸ்சியன் கொள்ளைச் சம்பவத்திற்கு முகம்கொடுத்திருக்கின்றார்.

ஆயுதங்களுடன் கிம் கடாசியனின் பாரிஸ் மாளிகைக்குள் புகுந்துள்ள ஆயுததாரிகள் அவரை ஆயுத முனையில் அச்சுறுத்தி, குளியலறையில் கட்டிவைத்துவிட்டு, அவரிடமிருந்த மில்லியன் யுரோ பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தை அடுத்து கிம் காடஸ்சியன் வெஸ்ட் தனது பிரத்தியேக விமானத்தின் மூலம் பிரான்ஸ்சில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற போது நியூயோர்க்கில் நடைபெற்ற இசை மற்றும் கலை நிகழ்வொன்றில் பங்குபற்றியிருந்த காடஸ்டனின் கணவரான ரப் பாடகர் கானியே வெஸ்ட், அந்த நிகழ்ச்சியை இடைநடுவில் இரத்துச் செய்திருந்தார்.

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக குறித்த நிகழ்வை இடைநிறுத்துவதாக காடஸ்டனின் கணவர் அறிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை இலகுவான ஒர் விடயமாக கருதுவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜேம்ஸ் கோடின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற போது காடஸ்சியனின் மூன்று வயதான குழந்தையும் 10 வயதான பிள்ளையும் உடனிருந்தார்களா என்பது குறித்து தெரியவரவில்லை.

ஏற்கனவே ஐ.எஸ் ஆயுததாரிகளால் தொடர்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆயுதக் கொள்ளையானது பாரிஸ்சின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

உலக நாடுகளில் இருந்து பாரம்பரியமாக பல சுற்றுலாப் பயணிகள் பாரிஸ்சிற்கு விஜயம் செய்கின்ற போதிலும் இவ்வாண்டின் முதல் அரையாண்டில் அந்த எண்ணிக்கை 6 தசம் 4 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Posts