பூனைக்குட்டியாக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை புலிக்குட்டியாகமாற்றியது நல்லாட்சி என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று(3) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினர்கள் வடக்கில் உள்ள இராணுவத்தினருக்கும், பௌத்தவிகாரைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் போது தற்போதைய அரசாங்கம் வாய்மூடிமௌனியாகப் பார்த்துக் கொண்டிருந்தமையினாலேயே விக்னேஸ்வரன் அவ்வாறுநடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2009 தொடக்கம் 2015 வரை பூனைக்குட்டியாக இருந்த முதலமைச்சர்விக்னேஸ்வரன் திடீரென புலியாக மாறியது எவ்வாறு என நாம் அனைவரும்புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலகுறிப்பிட்டுள்ளார்.
மேலும் மஹிந்தவின் காலத்தில் விக்னேஸ்வரன் அடங்கியிருந்ததாகவும், மஹிந்தவைபார்க்க வருவதென்றால் விநாயகர் சிலையை பரிசாகக் கொண்டு வருவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.