விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அத்தோடு, பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லையென்றும் மஹிந்த கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, “இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதே, அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மஹிந்த மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையென்றும், தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்ததாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.