யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக இரண்டு நீர் சுத்திகரிப்பு கருவிகள் Reverse osmosis plant பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கருவிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இதற்கு 14 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாளாந்தம் ஆயிரம் லீற்றர் குடிநீரை இதன் மூலம் விநியோகிக்க முடியுமென்று தாழ்நில காணி அபிவிருத்திச் சபையின் தலைவர் அசேல இத்தவெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சிறுநீரக நோய் நிவாரண பிரிவின் கோரிக்கைக்கு அமைய கடற்படை மற்றும் தாழ்நில காணி அபிவிருத்திச் சபை இதற்கு நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது