முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக, அவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த கதைத்தாரா? என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், நேற்று வெள்ளிக்கிழமை (30), அவன் காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது.
இந்த வழக்கில் ஆஜராவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த போது, மஹிந்த ராஜபக்ஷவும் வந்திருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.