மாணவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியவர்களுக்கு நிபந்தனை பிணை

பாடசாலை செல்லும் 16 வயது மாணவனை தொண்டைமானாறு அக்கரைப் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று, மாணவனை மதுபானம் அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நிபந்தணை பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (28) அனுமதியளித்தார்.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணையில் செய்ய அனுமதியளித்த நீதிவான், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேசத்துக்கு உரித்தான கிராமஅலுவலரின் அத்தாட்சிபடுத்திய விண்ணபத்தினை 1 வாரத்துக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்ககூடாது. அப்படி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறிந்தால் அனைவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க நேரிடும் ஆகிய நிபந்தனைகளை நீதிவான் விதித்தார்.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், தனியார் கல்வி நிலைய உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேரும், தங்கள் ஊரைச் சேர்ந்த மேற்படி மாணவனை வான் ஒன்றில் கூட்டிச் சென்று மதுபானம் பருக்கியதுடன், சிறுவனை ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை மே 18 ஆம் திகதி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிமன்றத்தால், சந்தேகநபர்கள் தொடர்ந்து 4 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts