சமூக சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக யாழ். மாவட்ட முன்னாள் செயலாளர் இமெல்டா சுகுமார் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சுக்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் இவருக்கும் நியமன கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர்களின் விபரம்:
1. எச்.பி.சீ. ஹேரத் – பொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சு
2. அனுர சிறிவர்த்தன – வர்த்தக முதலீட்டு அமைச்சு
3. டாக்டர் நிஹால் ஜயசிங்க – சுகாதார அமைச்சு
4. டாக்டர் டி.ஆர்.சீ ருபேரூ – விமான சேவைகள் அமைச்சு
5. டபிளியூ. எம். பந்துசேன – பொது முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு
6. ஜீ.கே.டி.அமரவர்தன – உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சு
7. யூ.ஆர்.செனவிரத்ன – உற்பத்தி மேம்படுத்தல் அமைச்சு
8. லலித் கன்னங்கரா – சுதேச மருத்துவ அமைச்சு
9. நிஹால் சோமவீர – தெங்கு அபிவிருத்தி மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு
10. வசந்த ஏக்கநாயக்க – கலாசார அமைச்சு
11. பி.எச்.எல்.டபிளியூ பெரேரா – நிர்மாண பொறியில் வீடமைப்பு அமைச்சு
12. ஏ.எம்.ஜயவிக்ரம – விளையாட்டுத் துறை அமைச்சு
13. இமெல்டா சுகுமார் – சமூக சேவைகள் அமைச்சு
14. பி.எச்.ஜே.பி.சுகததாஸ – மீள்குடியேற்ற அமைச்சு
15. ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க – உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு
16. எம்.கே.பி.திசாநாயக்க – பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு
17. சரித்த ஹேரத் – ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு