எழுக தமிழ் பேரணியின் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் தற்போது முற்றவெளியை சென்றடைந்துள்ளது. இந்த பேரணியில் மக்கள் அலையாக திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணி இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இருந்தும் யாழ்ப்பாணம் பல்கலைகலைக்கத்திற்கு முன்னாலிருந்தும் பேரணி ஆரம்பமானது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பேரணி தற்போது முற்றவெளியை சென்றடைந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதுடன் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டு எழுக தமிழ் பேரணியின் இறுதி கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்காண மக்கள் பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர்
வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றுள்ளனர்.