யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டதன் விளைவாக எடுக்கப்பட்ட நடவடிககையில் பொலிசாரினால் குறித்த தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதவது ,
நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்த்த தாயொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கத்தியினாலும் தடியினாலும் கையினாலும் மிக மோசமாக தாக்கும் காட்சி பக்கத்து வீட்டுக்காரரால் வீடியோவில் பதியப்பட்டு நீதிகோரி சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தது.
இதன் விளைவாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. பிரதேசசெயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவினரின் உதவியுடன் பொலிசாரால் குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்
தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாயார் உயிரிழந்தமையால் , தகப்பனார் வேறு திருமணம் முடித்து உள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே சிறுமியை மிக மூர்க்க தனமாக தாக்கியுள்ளார்.