பிரபல பாடசாலைகளில் வைத்தியர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல, கல்வி துறைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையின் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
கல்வித் துறைக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகளை கழித்து, வைத்தியர்களுக்கு மட்டும் அச் சலுகையை பெற்றுக் கொடுப்பது கவலையளிப்பதாக, அச் சங்கத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவதானம் செலுத்துமாறு கல்வி அமைச்சரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், மூன்று வருடங்கள் சேவை காலத்தை நிறைவு செய்துள்ள கல்வித்துறையின் கல்விசார ஊழியர்களின் பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் உள்வாங்க சுற்றறிக்கை ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.