ரஜினி – லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யா, 2010ல், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை, திருமணம் செய்தார். இந்நிலையில், நான்கு மாதங்களாக, அஸ்வின் – சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக, ரஜினி குடும்பத்தினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதேநேரத்தில், மறுக்கவும் இல்லை.