விடுதியில் தங்கியிருந்த வர்த்தகரை காணவில்லை

மருதானை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணமால் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடுதியின் உரிமையாளரினால் நேற்று இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வந்து குறித்த விடுதியியில் தங்கியிருந்துள்ள அவர் திடீரென காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

அவருடைய பொருட்கள் அடங்கியுள்ள பொதி மாத்திரம் விடுதியில் உள்ள அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts