Ad Widget

திடீரென ரத்த சிவப்பாக நிறம் மாறிய ஆறு!! பீதியில் பொது மக்கள்!

ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

red-river

ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான மாசுபட்ட நகரங்களில் ஒன்று நோரில்ஸ்க் நகரம். இந்த நகரத்தை கடந்து செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய சுற்றுச்சூழல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆற்றின் நிற மாற்றத்திற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் ஆற்று நீரில் கலப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், தொழிற்சாலை குழாயில் உடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அதன் காரணமாக இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என ரஷ்ய சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கண்முன்னே ஆறு நீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சியை பார்த்த மக்கள் திடீரென நிறம் மாறியிருப்பது கண்டு அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.

Related Posts