அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்ட விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார்.
இந்நிலையில் 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் நேர்காணல் செய்து வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.