போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி வௌிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த விழக்கிழமை குறித்த நபர் போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபர் இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரின் பெயர் சுதன் சுப்பய்யா என்பதுடன், 2005ம் ஆண்டு வரை மாரிமுத்து என்ற பெயரில் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக தற்காலிக விசா ஒன்றை வழங்குமாறு பூனே பொலிஸார் இலங்கை தூதுவராலயத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி அடுத்த வாரமளவில் குறித்த நபர் நாடு கடத்தப்படலாம் என்று இந்திய ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.