பம்பலப்பிட்டி வர்த்தகர் ஷகீப் படுகொலை : மேலும் ஐவர் சிக்கினர்; வாகனமும் மீட்பு

பம்பலப்பிட்டி பகுதியில் கோடீஸ்வர இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த வர்த்தகரை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு 9.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related Posts