Ad Widget

சிங்கள மாணவர்களை 22இல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய 04 சிங்கள மாணவர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் தீதிமன்றத்தில் சிங்கள மாணவர்கள் நான்கு பேர் முன்னிலையாகிய போதே, எதிர்வரும் 22ஆம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் சதீஸ்கரன் கோப்பாய் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

யாழ். பல்கலைகழகத்தில் கடந்த ஜூலை மாதம், முதலாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களை இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்கள் வரவேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதை அடுத்து, தமிழ் சிங்கள மாணவர்களிடையில் முரண்பாடு ஏற்பட்டு கலவரமாக மாறியிருந்தது.

இந்த சம்பவம், தொடர்பில் தமிழ், சிங்கள மாணவர்கள் எதிர் எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.


தமிழ் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தமிழ் மாணவர்கள் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிங்கள மாணவர்களுக்கு எதிராக தமிழ் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, நான்கு சிங்கள மாணவர்கள் யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.



இந்த வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சயந்தன், மாணவர்களுக்கிடையிலான மோதல் கலவர சம்பவமானது முடிவுற்று தற்போது இரு பகுதி மாணவர்களும் சமாதான முறையில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை தமிழ் மாணவர்களது வழக்கு தவணையின் போதே விசாரணைக்கு எடுத்துகொண்டால், நீதிமன்றம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.



இதனையடுத்து, நான்கு சிங்கள மாணவர்களையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறும் அதன்பின்னர் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முட்படுத்துமாறும் கோப்பாய் பொலிஸாருக்கு நீதிவான் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Posts