ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாளை சனிக்கிழமை 03 ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்ததினத்தினம் கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு 1000 கண்களின் விழிவெண்படலத்தை நீக்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவம் நிலையில், நேற்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திசிகிச்சை நிபுணர் எம்.மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை பிரதிப் பணிப்பாளர் செ.பவானந்தாராஜா ஆரம்பித்து வைத்தார்.
நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த செயற்பாட்டில் பொது மக்களை பங்குபற்றி பயன் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.