இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) யாழில் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பிலான நிகழ்ச்சி நிரலில் சி.வியுடனான சந்திப்பு உள்ளடக்கப்படாத போதிலும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரிதிநிதி மைக்கலோலே, முதலமைச்சர் விக்னேஸ்வரனை நேற்று தொடர்புகொண்டு பான் கீ மூனுடனான சந்திப்பு குறித்து அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பான் கீ முனை சந்திக்கும்போது அதில் வடக்கு முதல்வரும் இணைந்துகொள்ளலாமென கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். எனினும் அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வித பதிலும் வழங்கியிருக்கவில்லை. இதன் பின்னணியிலேயே இந்த பிரத்தியேக சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.