ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை மையப்படுத்தி ஊரில் பிரச்சினையை ஏற்படுத்து கின்றார்கள் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றய தினம் கோயில் வழக்கொன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஆற்று நீர் எப்போதும் கடலை நோக்கியே பாயும். பூகம்பம் ஏற்பட்டால் ,கடல்நீர் ஆற்று நீருடன் உள்நுழையும். அதேபோன்று கோவிலில் பிரச்சனைகளை தீர்த்த காலம் போய் தற்போது கோயிலை வைத்து பிரச்சனைகள் உருவாகின்றது என தெரிவித்தார்.