மூனைச் சந்திக்க தன்னுடன் வருமாறு முதலமைச்சருக்கு சம்பந்தன் அழைப்பு!

எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் செய்யும் ஐநா செயலரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ள நிலையில், தன்னையும் அவர்களுடன் வந்து சந்திக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐநா செயலரின் இலங்கைப் பயணத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்ட போதும் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தம்முடன் வருகை தந்து பான்கி மூனைச் சந்திக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் தான் பான்கிமூனுடனான சந்திப்புக்கு அழைத்துள்ளபோதிலும், அதில் கலந்துகொள்வதாக முடிவெடுக்கவில்லை எனவும் சந்திப்புப் பற்றிச் சிந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts