நல்லூர் தேரை முன்னிட்டு வரபிரசாதம்

யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுது;துள்ளது.

இன்று (30), நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை நாளாந்தம் பயணிக்கும் 4021ஆம் இலக்கத்தை கொண்ட நகரங்களுக்கிடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலாம் வகுப்பில் குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள் இணைக்கப்படும்.

அதேபோல, காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை ரயில் நிலையம் வரையிலும் நாளாந்தம் பயணிக்கும் 4022ஆம் இலக்கத்தை கொண்ட நகரங்களுக்கிடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில், முதலாம் வகுப்பில் குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள் இணைக்கப்படும்.

Related Posts