நாளை 30 ஆம் திகதி அனைவரையும் துக்க தினமாக அனுட்டிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். இத்தினத்தில் சர்வதேசம் தலையிட்டு எமக்குத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமெனக் கோரி காணாமல் போனோரின் குடும்பங்கள் வடக்குக் கிழக்கு முழுவதும் அடையாள போராட்டங்களை நடாத்தவுள்ளனர்.
அன்றைய தினம், அமைதியான முறையில் கண்டனப் பேரணியை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து மக்களையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.