பெண்ணொருவர் தீ வைத்து கொலை!! கள்ள காதலன் கைது!!

சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.

Related Posts