புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அனுமதியுடன் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த கைத்துப்பாகிக்களைக் கொண்டு 15 மீற்றர் வரை மிகவும் துல்லியமாகச் சூட்டினை வழங்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் கிழமை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து 25 கைத்துப்பாக்கிகள் கிடைக்குமெனவும், இக்கைத்துப்பாக்கிகள் கிடைத்தபின்னர், இதற்கான புகையிரத பாதுகாவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் புகையிரதத்திற்கு இரண்டு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் நியமிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.