புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சில போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அங்கு வருகை தந்தபோராளிகளே காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர்.
முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு திருமண நிகழ்வெனவும், அனைவரும் திருமண நிகழ்வுக்குச் சென்றுள்ளதால் குறித்த போராளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.