கடந்த இரண்டு அண்டுகளில் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருள் பெறுமதி 217 மில்லியன்!

கடந்த இரண்டு வருட காலத்தில் மாத்திரம் சுமார் 217.37 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் யாழ். மாவட்டத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் பொலிஸாரினால் 756.358 கிலோகிராம் எடையுடைய 151.27 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இந்த காலப் பகுதியில் விசேட அதிரடிபடையினரினால் 90.51 கிலோகிராம் எடையுடைய 19.10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களின் ஊடாக 47 மில்லியன் ரூபா பெறுமதியான 325.336 எடையுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை இராணுவம் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களிலிருந்து 378.305 கிலோகிராம் எடையுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்தள்ளார்.

Related Posts