ஆட் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட அறுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இது குறித்து அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், இந்த சம்பவத்தால் எல்லை பாதுகாப்பு தொடர்பிலான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என, தெரிவித்துள்ளது.
அத்துடன் இது போன்ற ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராட்டு வௌியிட்டு அவுஸ்திரேலியா, தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயத்தில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.