நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று (16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் காணப்படுகின்றன.