ரயில் மீது கல் வீசியவர்கள் விளக்கமறியலில்

கொழும்பு – கோட்டையில் இருந்து கல்கிசை வரை பயணித்த ரயிலுக்கு கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கல் மற்றும் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதலால் ஒருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts