பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.
இந்தநிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை றக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11ம் திகதி, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கடந்த 18ம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பிறிதொரு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.