Ad Widget

போர்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா உறுதி

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான போர்குற்றங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் மழை நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) வேலணையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் ஆட்சியமைத்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை. அதனால் தமிழ் மக்களது மனதில் ஏற்பட்ட கோபமும் விரக்கத்தியுமே பாரிய யுத்தத்திற்கு வழிவகுத்தது.

மேலும், கடந்த முப்பது வருட காலத்தில் இடம்பெற்ற அழிவுகள் பாரதூரமானவை. இந்நிலையில் எதிர்வரும் காலத்தில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும். அதற்கு அனைவருக்கும் சமவுரிமை சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அத்தகைய நிலையை நாட்டில் ஏற்படுத்த தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அர்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது.

அத்துடன் கடந்த கால யுத்ததில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட்டு அதில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

இது எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் மீளவும் ஏற்படாது இருக்க வழிசெய்யும் என்றும் குறிப்பிட்டார்.

Related Posts