மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை நேற்று (10) பிற்பகல் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, டி.சபீர்கான் (வயது 33) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட மொறவெவ பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

மாணவி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts